கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு மேற்கு தெருவைச் சேர்ந்த சிலம்பரசன் (33) என்பவர் ஜனவரி 20 அன்று ஐதராபாத் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. சிங்கப்பூரில்
வேலை செய்து வந்த சிலம்பரசன், ஜனவரி மாதம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி சிவசத்தியா நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.