கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், போதை பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறிய தாயை, மகன் தலையில் ஓடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். வீட்டில் குடித்துவிட்டு ஜாலியாக இருக்க தாய் இடையூறாக இருந்ததாகக் கூறி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த போலீசார், கொலையாளி மகனை கைது செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.