நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைந்த செய்தி பேரதிர்ச்சியளிப்பதாகவும், அவர் இனிய நண்பரும் பழகுவதற்கு எளியவரும், அவரது மறைவு அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பு என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.