நெல்லிக்குப்பம்: சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

58பார்த்தது
நெல்லிக்குப்பம்: சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களை மாணவர் காவல் படையுடன் இணைத்துக் கொண்டனர். அதன்படி நெல்லிக்குப்பம் காவல் நிலையம் வந்த மாணவர்கள் காவல் படையினருக்கு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் ஆகியோர் மாணவிகளுக்கு சட்டம் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த வகுப்புகளான சட்டங்களை மதிக்கவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு குடிமை உணர்வு மற்றும் குடும்பம், சுற்றுச்சூழல் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கவும், போதைப் பொருள் ஒழிப்பு, மாறுபட்ட நடத்தை, சகிப்புத்தன்மை, பிற சமூக தீமைகள் மற்றும் விபத்து, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட சட்டம் சார்ந்த வகுப்புகளை மாணவர்கள் காவல் படையினருக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சாந்தி, துரை, கார்த்திகேயன், லக்ஷ்மி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி