கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் சிட்டி பாபு திடலில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.