நெல்லிக்குப்பம்: இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

74பார்த்தது
நெல்லிக்குப்பம்: இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று 25 ஆம் தேதி காலை 10. 30 மணி முதல் மதியம் 1மணி வரை மின் நுகர்வோர் குறைபேட்பு கூட்டம் நடக்கிறது. 

இதில் பத்திரக்கோட்டை, நடுவீரப்பட்டு, சி. என். பாளையம், பி. என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், மேல்கவ ரப்பட்டு, கொங்கராயனூர், மேல்குமாரமங்கலம், அண்ணா கிராமம், குமராபுரம், பில்லாலி, அழகியநத்தம், திருமாணிக் குழி, எம். பி. அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறை மற்றும் புகார் குறித்து தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை நெல்லிக்குப்பம் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சசிகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி