நெல்லிக்குப்பம்: பெண் தூக்கிட்டு தற்கொலை

60பார்த்தது
நெல்லிக்குப்பம்: பெண் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி சந்தியா இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகிலுள்ள கீழ் அருங்குணத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சந்தியா தனது குழந்தையுடன் வந்து தங்கினார். 

வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சந்தியாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
Job Suitcase

Jobs near you