பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன், தனது நண்பர் குமரன் உடன் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.