பண்ருட்டி: பெட்ரோல் கேட்டு தாக்குதல்; சிசிடிவி காட்சி

0பார்த்தது
பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரியும் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நிலா பிரியன் என்பவர், நேற்று இரவு பணியில் இருந்தபோது, திருவதிகை பகுதியைச் சேர்ந்த ஒருவர் இலவசமாக பெட்ரோல் கேட்டுள்ளார். ஊழியர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, இன்று அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து ஊழியரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி