கடலூர் மாவட்டம் பண்ருட்டி பழைய கடலூர் ரோட்டில் வசிப்பவர் வாசு இவருடைய மனைவி சுந்தரி இவர்களது மகன் மணி என்பவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கு இளம்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மணியின் தாய் சுந்தரி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த இளம் பெண்ணின் தந்தை ரமேஷ், தாயார் மகேஸ்வரி மற்றும் அவர்களது உறவினர்கள் மணிமாறன், கோபால் மனைவி பரமேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து வாசு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த சுந்தரியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் உள்பட 4 பேர் மீது பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.