பண்ருட்டி: 7 பேர் மீது வழக்கு

52பார்த்தது
பண்ருட்டி: 7 பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள ராயர்பாளையம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினருக்கும், மகாலிங்கம் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் வீடு புகுந்து சாராமரியாக தாக்கி கொண்டனர். இதில் மகாலிங்கம் தரப்பைச் சேர்ந்த முத்துப் பாண்டி, அரசன், ராசாத்தி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையில் தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இது தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த மேகவர்மன், ரஞ்சித் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி மகன் நீதிமாறன் என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி