புதுப்பேட்டை அருகே சிறுகிராமத்தில், நில அடங்கல் வாங்கச் சென்ற 71 வயது விவசாயி முத்துசாமியை, முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துசாமி அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.