கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ. ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி அறிந்ததும் பண்ருட்டி ஊர் நல அலுவலர் மோகன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.