பண்ருட்டி அருகே மருங்கூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த ராஜி (25) என்பவருக்கும், 17 வயது கல்லூரி மாணவிக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ராஜி மற்றும் அவரது பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.