பண்ருட்டி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

752பார்த்தது
பண்ருட்டி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
பண்ருட்டியில், 22 வயது அரசு என்ற இளைஞர், 17 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி, அவரை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி