கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டு லட்சுமிபதி நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.