பண்ருட்டி: ஜேசிபி இயந்திரத்தில் தீ விபத்து

0பார்த்தது
பண்ருட்டி: ஜேசிபி இயந்திரத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.