பண்ருட்டி: பெண்ணை மானபங்கப்படுத்திவர் கைது

59பார்த்தது
பண்ருட்டி: பெண்ணை மானபங்கப்படுத்திவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி வசந்தா (வயது 55). இவரது குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த வைத்தியநாதன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தா தனது நிலத்தில் பலாப்பழம் அறுவடை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தியநாதனின் மகன்கள் தமிழ்ச்செல்வன், இசைச்செல்வன், ஹரிகிருஷ்ணன் மகன் முருகன் ஆகிய 3 பேரும் வசந்தாவை ஆபாசமாகத் திட்டி, கீழே தள்ளி, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி