பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

349பார்த்தது
பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படவுள்ள ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை திட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் அடுத்த சந்ததியினரின் வாழ்வாதாரம் அழியும் என்றும், மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி