பண்ருட்டி: எம்எல்ஏ வேல்முருகன் அறிக்கை வெளியீடு

72பார்த்தது
பண்ருட்டி: எம்எல்ஏ வேல்முருகன் அறிக்கை வெளியீடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையான காரைக்காடு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்கள் மீது மது போதையில் இருந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் கோவை திருப்பூர் போன்ற பல்வேறு நகரங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து பல்வேறு சட்டஒழுங்கு சீர்கேடுகள் அதிகரித்து வரும் நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளதை வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத்தவர் வருகையையும், குடியேற்றங்களையும் நெறிமுறைப்படுத்த வேண்டுமென்றும், உரிய வழிகாட்டுநெறிமுறைகளை வகுத்து அவர்கள் வருகை மற்றும் குடியேற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதோடு வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதுபோன்று உள்நுழைவுச்சிட்டு அனுமதி முறையையும் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.