பண்ருட்டி: அரிசி ஆலையில் பணம் திருட்டு

768பார்த்தது
பண்ருட்டி: அரிசி ஆலையில் பணம் திருட்டு
புதுப்பேட்டை மெயின் ரோட்டில் அரிசி ஆலை நடத்தி வரும் ராஜேந்திரன், வியாபாரம் முடிந்து வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலை ஆலையைத் திறக்க வந்தபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டி காணாமல் போயிருந்தது. நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து ஆலையில் புகுந்து, ₹16 ஆயிரம் பணம் இருந்த கல்லாப்பெட்டியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி