பண்ருட்டி: பெயிண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு

0பார்த்தது
பண்ருட்டி: பெயிண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு
பண்ருட்டி அருகே சேந்தமங்கலம் வைபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (36) என்பவர் மது அருந்தும் பழக்கமுடையவர். சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிய நிலையில், காட்டுக்கூடலூர் டாஸ்மாக் கடை அருகே மழைநீர் தேங்கிய பள்ளத்தில் பெரியசாமி மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி