பண்ருட்டி: படம் பிடித்து மிரட்டல்

74பார்த்தது
பண்ருட்டி: படம் பிடித்து மிரட்டல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பாலமுருகன் நகரை சேர்ந்த செல்வகுமார் தனியார் மோட்டார் பம்ப் செட் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக செல்வகுமார் பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை நிர்வாணமாக தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு நான் சொல்வது போல் நடக்கவில்லை என்றால் இந்தபடத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று செல்வகுமார் கூறி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை தேடி வருகின்றனர்.