பண்ருட்டி வார்டு பகுதி சபா கூட்டம்

307பார்த்தது
பண்ருட்டி வார்டு பகுதி சபா கூட்டம்
பண்ருட்டி நகராட்சி சார்பில் 26வது வார்டு தட்டாஞ்சாவடி கொக்கு பாளையம் பகுதியில் நடைபெற்ற வார்டு பகுதி சபா கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாரதி நகரில் புதிய ரேஷன் கடை, வாட்டர் டேங்க், வெங்கட நகரில் நடைபயிற்சி பூங்கா, திடீர் குப்பம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, தட்டாஞ்சாவடி ஒக்கபாளையம் சாலையில் பேவர் பிளாக் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். நகராட்சி நிர்வாகம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற உறுதியளித்தது.

தொடர்புடைய செய்தி