பண்ருட்டி அருகே வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 60 வயது தொழிலாளி ரவிச்சந்திரன், கால் வலியால் அவதிப்பட்டு மது அருந்தி வந்துள்ளார். வலி தாங்காமல் வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.