கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் (40) என்பவர், தனது மனைவி ரஞ்சனி (34) மற்றும் குழந்தைகள் ராகவர்ஷினி (9), ஜெயபிரியன் (6) ஆகியோர் மே 31 ஆம் தேதி மாலை திடீரென காணாமல் போனதாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவராமன் வேலைக்குச் சென்று வீடு திரும்பியபோது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்து, உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.