கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவியை சேர்ந்த 56 வயது என்எல்சி ஊழியர் கண்ணன், கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.