கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சுவாமிகள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் இன்று முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.