தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை 15 நாட்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு கடந்த 12-ம் தேதி அறிவித்தது. ஆனால், தற்போது வரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை எப்போது மூடுவார்கள் என பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.