கடலூர்: 2 பேர் பணியிடை நீக்கம் - எஸ்பி உத்தரவு

2பார்த்தது
கடலூர்: 2 பேர் பணியிடை நீக்கம் - எஸ்பி உத்தரவு
கடலூர் மாவட்டம் ஆவினன்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலர் இமாம் உசேன் ஆகியோர் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையில் நின்றிருந்த நான்கு பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிபோதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இருவரையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி