கடலூர்: 2 வது நாளாக கடும் பனிப்பொழிவு

630பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, பெண்ணாடம், கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.