கரூரில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியதைக் கண்டித்து, திட்டக்குடியில் நேஷனல் ஜேர்னலிஸ்ட் யூனியன் மற்றும் திட்டக்குடி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது பத்திரிக்கையாளர் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது.