கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஒரங்கூர், பட்டாக்குறிச்சி ஊராட்சிகளில் தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள், பீடிஓ, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.