கடலூர் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லக்கூர் கைகாட்டி அருகே சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதற்குப் பின்னால் வந்த லாரி ஆம்னி பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்துவிட்டார்.
மீதமுள்ள நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.