கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கடலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வழித்துணை முருகன் ஆலயம். இந்த ஆலயத்தில் இருந்து பழனி பாதயாத்திரை 30ஆம் ஆண்டு வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த பாதயாத்திரையில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி ஆண்டவரை தரிசிக்க பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கினர். ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்லும் நிகழ்வு இக்கோவிலில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.