கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பாசிகுளம் கிராமத்தில், மாடு தண்ணீர் குடத்தை தட்டியதால் ஏற்பட்ட தகராறில் கல்யாணசுந்தரம் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் மற்றும் முரளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் விஜய் கைது செய்யப்பட்டார். கடந்த 8 ஆம் தேதி மாலை, கல்யாணசுந்தரத்தின் பசு மாடு மேய்ச்சலுக்கு சென்று திரும்பியபோது, விஜய் என்பவரது வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் குடத்தை தள்ளிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் அவரது சகோதரர் முரளி, கல்யாணசுந்தரத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.