தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் திட்டத்தைப் போல, மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
அதன் அடிப்படையில் கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதி வீரபாண்டியன் தெருவில் வசித்து வரும் மொழிப்போர் தியாகி சின்னசாமி மகள் திராவிட செல்விக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் ரூ.1,00,000 நிதியுதவி வழங்கினார்.