கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் தலைமையில் போலீசார் லட்சுமணபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (35), கதிர்வேல் (28), செந்தில் (30), குமார் (29), அழகு துரை (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.