கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (மே 20) கடலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் கடலூர் பகுதியின் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.