கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் சேதுவராயன்குப்பத்தில் உள்ள 5 வது மின் மாற்றியில் 8 தாமிர கம்பிகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இது பற்றி இளமின் பொறியாளர் செல்வ சுப்பிரமணியன் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.