கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பனையந்தூர் மேற்கு தெருவை சேர்ந்த கண்ணதாசன் இவருடைய மனைவி சத்யா இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று கண்ணதாசன் தனது வீட்டில் பழுதான 'ஏர் கூலரை' சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியதில் இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சத்யா சிறுபாக்கம் காவல் துறையினர் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.