திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் தெற்கு ஒன்றியம் செளந்திரசோழப்புரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.