கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சரக்கு வாகனத்தில் சென்ற 25க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.