கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொட்டாரம் புதிய காலனியைச் சேர்ந்த தமிழ் மாறன் (29) என்ற ஓட்டுநர், 17 வயது சிறுமியை இரு வீட்டிற்கும் தெரியாமல் கட்டாய திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் மற்றும் தமிழ்மாறனின் மனைவி இருவரும் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மாறனை கைது செய்தனர்.