கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசன், தேர்தல் களப் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.