கடலூர் மாவட்டம் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் வெள்ளாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (44) என்பவரது மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.