திட்டக்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முத்து (40) என்பவர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் நின்று பொதுமக்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசி, போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டிருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.