திட்டக்குடி: கள்ள நோட்டு அச்சடிப்பு

84பார்த்தது
திட்டக்குடி: கள்ள நோட்டு அச்சடிப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் செல்வம் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து கள்ள நோட்டு அச்சடித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காவல் துறையினர் வருவதைக் கண்ட வி.சி.க நிர்வாகி செல்வம் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனையடுத்து அந்த கொட்டகையில் காவல் துறையினர் சோதனை செய்தபோது 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் வாக்கி டாக்கி, ஏர்கன் பிஸ்டல், ஏர்கன் பிரிண்டிங் மிஷின், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல் ஆகியவற்றை பறிமுதல் செய்து செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி