கடலூர் மாவட்டம் தி. இளமங்கலம் பகுதியில் விசிக மாநில நிர்வாகி மகேந்திரனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனும் அவரது நண்பர் வெங்கடேசனும் மகேந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். வெங்கடேசன் தலைமறைவாக உள்ளார்.