திட்டக்குடி: ஆடு திருட முயன்ற வாலிபர் கைது

3பார்த்தது
திட்டக்குடி: ஆடு திருட முயன்ற வாலிபர் கைது
திட்டக்குடி அடுத்த புத்தேரி கிராமத்தில் நிலத்தில் ஆடுகளை பராமரித்து வந்த ரங்கசாமி என்பவரின் இரண்டு ஆடுகளை பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் திருட முயன்றார். ரங்கசாமியின் கூச்சலால் கிராம மக்கள் உதவியுடன் அந்த மர்மநபர் பிடிக்கப்பட்டு, ஆடுகள் மீட்கப்பட்டன. போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேலூரைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பதும், பல இடங்களில் ஆடுகள் திருடியதும் தெரியவந்தது. ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து ராஜபாண்டியனை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you